நடன இயக்குநர் ரகுராம் காலமானார்

நடன இயக்குநர் ரகுராம் காலமானார்
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் பிரபலமான நடன இயக்குநரான ரகுராம் இன்று காலமானார். அவருக்கு வயது 64.

தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குராக திகழ்ந்தவர் ரகுராம். கலா மாஸ்டர், குஷ்பு உள்ளிட்ட பலருக்கு குருவாக திகழ்ந்தவர். ரஜினி, கமல் நடித்த பல்வேறு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைத்து பிரபலமானவர். தமிழ் திரையுலகில், 50 வருடங்கள் பணியாற்றிதற்கு இவருக்கு விழா எடுக்கப்பட்டது.

இன்று மதியம் 1 மணிக்கு அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு டிசம்பர் 1ம் தேதி நடைபெறவிருக்கிறது.

பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும், இவரது மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in