தீபாவளி வெளியீட்டு முனைப்பில் கடவுள் இருக்கான் குமாரு

தீபாவளி வெளியீட்டு முனைப்பில் கடவுள் இருக்கான் குமாரு
Updated on
1 min read

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள்.

சுமார் 95% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. பாடல் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இன்னும் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் இப்படம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், "'கடவுள் இருக்கான் குமாரு' தீபாவளிக்கு வெளியாகும். இறுதிகட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்று ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இப்படத்தின் தமிழக உரிமையை சேலம் சிவா மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படங்களிலேயே அதிக விலைக்கு போன தமிழக உரிமை இப்படம் தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, செப்டம்பர் 14-ம் தேதி டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in