

மதுரையில் தெனாவெட்டாக திரியும் இளைஞனாக விஜய், மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படம் 'ஜில்லா'.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மஹத் மற்றும் பலர் நடிப்பில், நேசன் இயக்கியிருக்கும் படம் 'ஜில்லா'. இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்திருக்கிறார்.
மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய். அடிதடி பஞ்சாயத்துகளில் தன் தந்தைக்கு ஆதரவாகக் களம் இறங்குகிறார் விஜய். விஜய் - மோகன்லாலுக்குள் என்ன நடக்குறது என்பதை சுவாரசியமான காட்சிகளோடு கூற இருக்கிறது 'ஜில்லா'.
மாஸ் காட்சிகளுக்கு விஜய் - மோகன்லால், காமெடிக்கு சூரி, காதல் காட்சிகளுக்கு காஜல் என அனைத்து அம்சங்களும் கலந்த கலவையாக உருவாகியிருக்கிறது 'ஜில்லா'. விஜய் படத்தின் பாடல்கள் எப்போதுமே ஹிட் தான். அந்த வகையில் 'ஜில்லா' படத்தின் பாடல்கள் அமைந்திருப்பது ஹைலைட்.
படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்தாலும் படத்தின் டிரெய்லர் இறுதியாக தான் வெளியிடப்பட்டது. டீஸர் மூலமாகவே படத்திற்கு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள்.
விஜய் - மோகன்லால் இணைந்து நடித்துள்ள காட்சிகள் அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்கிறது படக்குழு. அரசியல் வசனங்களோ, காட்சிகளோ இல்லாமல் ஒரு கமர்ஷியல் படத்தை எதார்த்தமாக எடுத்திருக்கிறார்களாம்.
இப்படத்திற்கு சம்பளமே வாங்காமல், கேரளா உரிமையை கொடுத்துவிடுங்கள் என்று கூறி நடித்துக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். விஜய்யின் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது ஜில்லா.