

பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், அனுஷா என தனது பெயரளவில் மாற்றம் செய்துள்ளார் நடிகை சுனைனா.
'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'யாதுமாகி', 'வம்சம்', 'நீர்ப்பறவை', 'சமர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுனைனா. இவரது பெயர் சொல்லும் அளவில் எந்த ஒரு படமும் இவருக்கு வாய்க்கவில்லை.
இதனால் நியூமராலஜிப்படி தனது பெயரை அனுஷா என்று மாற்றியமைத்து இருக்கிறார். தற்போது ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வரும் 'நம்பியார்' படத்தின் டைட்டில் கார்ட்டில் தனது பெயரை அனுஷா என்று போடும்படி கூறியிருக்கிறார்.
“எனது அம்மாவும், அப்பாவும் தான் இந்தப் பெயரை செலெக்ட் செய்தார்கள். இனி என்னுடைய அதிகாரப்பூர்வமான பெயர் அனுஷாதான். இந்த புதிய பெயர் எனக்கு மேலும் பல புதிய பட வாய்ப்புகளை பெற்றுத்தரும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் அனுஷா.