ஜி.வி.பிரகாஷ் - வள்ளிகாந்த் இணையும் செம

ஜி.வி.பிரகாஷ் - வள்ளிகாந்த் இணையும் செம
Updated on
1 min read

புதுமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு 'செம' என தலைப்பிட்டுள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரூஸ்லீ' படத்தை மார்ச் 17-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதில் பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படமும் ஒன்று. இதனை பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வள்ளிகாந்த் இயக்கி வந்தார். தன்னுடைய நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் கூற அவருக்கு மிகவும் பிடித்துவிடவே இப்படத்தை தொடங்கியுள்ளார்கள்.

பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்துவந்த இப்படத்துக்கு தற்போது 'செம' என தலைப்பிட்டுள்ளது படக்குழு.

அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in