ராஜா ரங்குஸ்கி படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்ட பணிகள் துவக்கம்

ராஜா ரங்குஸ்கி படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்ட பணிகள் துவக்கம்
Updated on
1 min read

தரணீதரன் இயக்கத்தில் சிரிஷ் நடித்து வந்த 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு. இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

'மெட்ரோ' படத்தைத் தொடர்ந்து தரணீதரன் இயக்கத்தில் உருவான படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் சிரிஷ். 'ராஜா ரங்குஸ்கி' என பெயரிடப்பட்ட படத்தில் சாந்தினி நாயகியாக நடித்து வந்தார்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி துரிதமாக நடைபெற்று வந்தது. இப்படத்தை பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

தற்போது மொத்த படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து ஜுனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இப்படக்குழுவினருக்கு நாயகன் சிரிஷ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in