

விக்ரம் - நயன்தாரா நடிப்பில், அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் வெளியாகியுள்ள திரைப்படம் 'இருமுகன்'. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளியான படம், அவற்றைப் பூர்த்தி செய்ததா? அவை குறித்த இணையவாசிகளின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.
விக்ரம் என்ற திரையுலக சச்சின் அடிக்கும் சதங்கள் வீணாகி போவதே வாடிக்கை ஆகிவிட்டது. நீண்ட காலம் தோல்வி கண்டு பாலாவின் சேது மூலம் உலகறிந்து தமிழ்த் திரையுலக பிதாமகன் ஆகிவிட்ட பின்னும் திரைக்கதையில் சின்னச் சின்ன தவறுகளைக்கூட கண்டுகொள்ள முடியாத சாதாரண ஹீரோவாக இருப்பது ஏன்?
ஸ்கிரிப்ட் நல்லா ஸ்டெடி பண்ணிட்டு நாலு நலம் விரும்பிகளிடம் ஆலோசித்து கதைகளைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் உழைப்பு வீணாவது ஒரு ரசிகனாக வருத்தமே!
இருமுகன் படம் செம்மமமம... 'ஐ'க்கும் மேல தெறி. ரொம்ப நாள் கழிச்சு நான் பாத்த படத்துலயே எனக்கு புடிச்ச படம் இது. நயன் செம்ம அழகு, நித்யா ஆக்டிங், தம்பி ராமையா கலக்கல், சீயான் மாஸ் & லவ். #ஹேப்பி
மிரட்டும் ஒரு முகன் அதை விரட்டும் ஒரு முகன்.
இருமுகன் எனது பார்வையில்...
1. அவசியம் பார்க்கலாம்
2. ஒருமுறை பார்க்கலாம்
3. டிவிடியில் பார்க்கலாம்
4. விடுமுறை தின சிறப்புப்படமாக பார்க்கலாம்
5. நேரத்தை மிச்சமாக்கலாம்.
இவ்வளவு மெனக்கெட்டு நடிக்கிறதுக்கு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மெனக்கெடலாம். #இருமுகன்
இருமுகன் படம் பார்க்கப் போயிருந்தேன்.... என்னத்த சொல்ல?
சொல்ல ஒண்ணும் இல்ல!
இருமுகன் - பக்கா மாஸ் லவ் கதை.
இருமுகத்தை காண வந்த பல முகங்கள் ஏமாற்றத்துடன் சென்றன.
விஷூவல் நமக்கு பிடிச்சாப்ல நல்லா பளீர்னு இருந்துச்சி.
ரொம்ப நாள் கழிச்சி விக்ரமுக்கு ஒரு நல்ல படம் அமைஞ்சி இருக்கு. #இருமுகன் தாறு மாறு.
#சீயான்விக்ரம் நடிப்பின் உச்சம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
விக்ரம் என்னும் நடிப்பு ராட்சசன்.. #இருமுகன்
#இருமுகன் சாரி விக்ரம் சார்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
விக்ரன் என்னையும் பாரு, என் உழைப்பையும் பாருன்னு சொல்றதோட பார்த்தா இருமுகன் ஒரு மாதிரி ஓகேதாம்ய்யா...
இந்த வருடம் வந்த பெரிய ஹீரோக்கள் படத்துல இருமுகன் படம் செம. லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் விக்ரம் மேஜிக்..
அவ்வளவு நல்லாவும் இல்ல, அவ்வளவு கேவலமாவும் இல்ல.... #இருமுகன்.
விக்ரமோட வளமையான உழைப்பு, நயன் அவ்ளோ அழகு, என்ன இன்னும் கொஞ்சம் திரைக்கதையை மெருகேற்றியிருக்கலாம்! #இருமுகன்.
நயன்தாரா, வயது ஏற ஏற வைரம் ஆகிக் கொண்டிருக்கிறார். என்னே ஒரு மினுமினுப்பு, பளபளப்பு. தீபா வெங்கட்டிற்கு நிரந்நர விடுமுறை கொடுத்து விட்டு, இனி சொந்தக்குரல்தான் போல.. நித்யா மேனன்...படத்திற்குத் தேவையே இல்லை என்றாலும், அவர் காட்டும் அந்த ஆட்டிட்டியூட் அட்டகாசம்.
இருமுகன் ஒருமுறை பார்க்கலாம்தான். ஆனால், 'அதென்ன பியூட்டி..காலேஜ் பியூட்டி' அளவிற்கு இல்லை. இனிமேலாவது, 'சார்..இந்த ஸ்கிரிப்ட்ல ஒங்களுக்கு இருபது கெட்டப் சார்' எனக் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் சூதானமாக இருக்க வேண்டும்.
இருமுகன் - விக்ரம், நயனுக்காக ஒரு முறை
நல்ல பொழுதுபோக்கான அறிவியல் அழிவு பற்றிய படம் இருமுகன்.
இருமுகன் - ஒரு முகம் ரசிக்கலாம். மறுமுகம் பார்க்கவே முடியாது.