திரு இயக்கத்தில் சந்தீப் கிஷன்: தமிழ், தெலுங்கில் உருவாகிறது

திரு இயக்கத்தில் சந்தீப் கிஷன்: தமிழ், தெலுங்கில் உருவாகிறது
Updated on
1 min read

திரு இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க முடிவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ளது.

'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்' மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கியவர் திரு. 'நான் சிகப்பு மனிதன்' படத்தைத் தொடர்ந்து ஜெய், தப்ஸி நடிக்க புதிய படமொன்றை தொடங்கினார் திரு. ஆனால், அப்படம் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விக்ரம் நாயகனாக நடிக்க 'கருடா' தொடங்கப்பட்டது. பேச்சுவார்த்தை நிலையிலே இப்படம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது சந்தீஷ் கிஷன் நாயகனாக நடிக்க புதிய படமொன்றை இயக்கவுள்ளார் திரு. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in