ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் சுசித்ரா

ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் சுசித்ரா
Updated on
1 min read

பல்வேறு சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்ட சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தை இப்போது காணமுடியவில்லை.

தனது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் - த்ரிஷா, அனிருத் - ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் போக, செல்வராகவன் - ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின. இதனால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து சுசித்ரா, "முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார். இதனால் ஏற்பட்டு வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in