நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம்: நடிகர் விஷால் பசுமை தீர்ப்பாயத்தில் மனு

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம்: நடிகர் விஷால் பசுமை தீர்ப்பாயத்தில் மனு
Updated on
1 min read

தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான நடிகர் விஷால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு கிணறுக்கு, நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் நீர் தேவை என அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீரை எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்பது குறித்த அம்சங்கள் திட்டத்தில் இல்லை. கடந்த வாரம் தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்நிலையில் எங்கிருந்து, இந்த திட்டத்துக்கு தேவையான நீர் கொண்டுவருவார்கள் என்பது தெரியவில்லை.

அதனால், பசுமைத் தீர்ப்பாயம் சார்பில், நிபுணர் குழு அமைத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான நீராதாரம் அப்பகுதியில் உள்ளதா, தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வார்கள் என்பதை கண்டறிய வேண்டும். நிபுணர் குழுவின் பரிந்துறை அடிப்படையில் திட் டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்ட சோதனைக்காக நெடுவாசல் பகுதியில் தோண்டப்பட்டுள்ள கிணறுகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. அதனால் இந்த திட்டத்துக்கு உடனடியாக இடைக்காலத் தடை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுதாரர் கோரி யிருந்தார்.

இந்த மனு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி எம்.எஸ். நம்பியார், தொழில்நுட்ப உறுப் பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கவுஷிக் நரேன் சர்மா ஆஜராகி, இத்திட்டத்துக்கு உடனடியாக தற்காலிக தடை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஹைட்ரோகார்பன் இயக்குநர் ஜெனரல், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 9 துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

மனு மீதான விசாரணை, ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in