

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி' இசை ஜனவரி 3ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.
தனுஷ், அமலா பால, 'எதிர்நீச்சல்’ சதிஷ் மற்றும் பலர் நடிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைக்க, தனுஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தனுஷ் நடிப்பில் குறைவான நாட்களில் முடிக்கப்பட இருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. படத்தின் டீஸர், புகைப்படங்கள் என எதுவுமே இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில், “'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இசை ஜனவரி 3ம் தேதி வெளியாகும்” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், அனிருத் ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
காரணம், ஜனவரி 3ம் தேதி 'வேலையில்லா பட்டதாரி', பிப்ரவரி 14ம் தேதி 'மான் கராத்தே' என ஒரு மாத இடைவெளியில் அனிருத் இசையமைக்கும் இரண்டு படங்களின் இசை வெளியாக இருக்கிறது.