நடிகர் குள்ளமணி கவலைக்கிடம்

நடிகர் குள்ளமணி கவலைக்கிடம்
Updated on
1 min read

நடிகர் குள்ளமணி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நவாப் நாற்காலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் குள்ளமணி. இவரது இயற்பெயர் சுப்பிரமணி. வயது 61.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவரது குள்ளமான தோற்றமே காமெடி காட்சிகளுக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது.

சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்து, அதன்பின் திரையுலகிற்கு வந்தவர். ’கரகாட்டக்காரன்' படத்தில் வரும் இவரது காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கே.கே.நகர், ராணி அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த குள்ளமணி சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால், ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in