ஸ்ருதிக்கு கமல் அறிவுரை

ஸ்ருதிக்கு கமல் அறிவுரை
Updated on
1 min read

நடிகை ஸ்ருதிஹாசன் மீது செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் தற்போது ‘வெல்கம் பேக்’ என்ற இந்தி படத்திலும், ‘ரேஸ் கெளரம்’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.

‘வெல்கம் பேக்’ படப்பிடிப்புக்காக மும்பையில் ஒரு வாடகை வீட்டில் அவர் தங்கியிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, அவரது வீட்டின் அழைப்புமணி ஒலித்துள்ளது. அறையில் தனியாக இருந்த ஸ்ருதி, வீட்டு வேலைக்காரர்தான் வந்திருப்பார் என்று கருதி கதவைத் திறந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கதவை வேகமாகத் தள்ளி ஸ்ருதி யைப் பிடிக்க முயன்றிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட ஸ்ருதி, அவரைத் தள்ளிவிட்டு கதவை உள் பக்கமாகத் தாள் போட்டுக் கொண்டார். ஸ்ருதியைத் தாக்கிய அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து மும்பையில் உள்ள ஸ்ருதிஹாச னின் மேனேஜரிடம் கேட்டோம்.

‘‘இந்த சம்பவம் நடந்த பிறகு, செவ்வாய்க்கிழமை முழுக்கவே ஸ்ருதி டென்ஷனாக இருந்தார். புதன்கிழமைதான் இயல்பு நிலைக்கு வந்தார். தற்போது தனது தோழியின் வீட்டில் ஸ்ருதி தங்கியிருக்கிறார். அடுத்த இரண்டு தினங்களில் ‘வெல்கம் பேக்’ படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் செல்ல இருக்கிறார். அதுவரை தோழியின் வீட்டில் தங்கியிருக்க விரும்புகிறார். வெளிநாட்டுப் படப்பிடிப்பு முடிந்த பின் மும்பையில் தங்கியிருந்த பழைய வீட்டை காலி செய்துவிட்டு புதிய வீட்டில் குடியேற முடிவெடுத்திருக்கிறார்’ என்றார்.

‘‘நான் நலமுடன் இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி!’’ என்று டிவிட்டரில் ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

கமல் அறிவுரை

கோவாவில் நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், “நான் ஸ்ருதியுடன் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். மும்பையில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவரை மேலும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in