

‘சிங்கம் 3’ படத்தை இணைய தளங்களில் சட்டவிரோதமாக பதி வேற்றம் செய்ய தடை விதிக்கக் கோரிய மனு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘சிங்கம் - 3’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத் தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். ‘‘சிங்கம் - 3 படத்தை சட்ட விரோத மாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் கோரி யிருந்தார்.
நீதிபதி டி.ராஜா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை உரிமையியல் வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி கூறி னார். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனு தாரர் தரப்பில் தெரிவித்த பிறகு, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.