Last Updated : 03 Jan, 2014 01:55 PM

 

Published : 03 Jan 2014 01:55 PM
Last Updated : 03 Jan 2014 01:55 PM

த்ரிஷ்யம் ரீமேக்கில் யார்? : போட்டியில் முன்னணி நடிகர்கள்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' ரீமேக்கில் நடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க, ஜீது ஜோசப் இயக்கியிருக்கும் படம் 'த்ரிஷ்யம்'. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியான இப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து ரீமேக் உரிமைக்கு பேச்சுகள் தொடங்கியது.

புத்தாண்டு அன்று 'த்ரிஷ்யம்' படத்தினை விக்ரம் பார்த்துவிட்டு, தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தில் நடித்து விட்டு, 2 கமர்ஷியல் படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம்.

ஐங்கரன் தயாரிப்பில் தரணி இயக்கும் படம், ஹரி இயக்கும் படம் என இரண்டு படங்கள் ஏற்கனவே விக்ரம் வசம் இருக்கிறது. முதலில் தரணி இயக்கத்தில் நடிக்கவிருப்பதால், ஹரி படம் தாமதம் ஆகிறது. இதனால் விஷால் நடிக்கும் படத்தினை இயக்கிவிட்டு, விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஹரி. 'த்ரிஷ்யம்' ரீமேக்கில் நடிக்க விக்ரம் தேதிகள் ஒதுக்குவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

அதுமட்டுமன்றி, 'ஜில்லா' படக்குழுவிற்கு தனது 'த்ரிஷ்யம்' படத்தினை திரையிட்டு காட்டியிருக்கிறார் மோகன்லால். படம் முடிவடைந்தவுடன் அனைவருமே எழுந்து நின்று கைதட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்கள். மோகன்லாலை தொடர்புகொண்ட விஜய், 'த்ரிஷ்யம்' படத்தைப் பற்றி பாராட்டி பேசியிருக்கிறார். விஜய்யின் இந்த பாராட்டால், ரீமேக்கில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மொத்தத்தில் 'இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்' என்ற விளம்பரம் வரும்வரை 'த்ரிஷ்யம்' ரீமேக் பற்றிய செய்திகள் தொடரத்தான் செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x