தமிழில் அறிமுகமாகும் பஹத் பாசில்

தமிழில் அறிமுகமாகும் பஹத் பாசில்
Updated on
1 min read

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பஹத் பாசில், விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். '22 Female Kottayam', 'Diamond Necklace', 'Annayum Rasoolum', 'Amen' உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் யாவுமே ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டவை. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கிய பாசிலின் மகன் பஹத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடித்து வந்த நஸ்ரியாவிற்கும் இவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் 2014ல் தமிழில் அறிமுகமாக திட்டமிட்டு இருக்கிறார் பஹத் பாசில். இதற்கான பல முன்னணி இயக்குநர்கள் கதை கூறி இருக்கிறார்கள். 'ஆரண்ய காண்டம்' தியாகராஜன் குமாரராஜா மற்றும் கெளதம் மேனன் கூறிய கேங்க்ஸ்டர் கதை பஹத் பாசிலுக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம். விரைவில் இவர்கள் இருவரில் ஒருவரது இயக்கத்தில் தமிழில் அறிமுகமாவார் பஹத் என்று சொல்லப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in