கடுமையான தண்டனைகளே குற்றங்களைத் தடுக்கும்: பாவனா பிரச்சினையில் விஷால் கருத்து

கடுமையான தண்டனைகளே குற்றங்களைத் தடுக்கும்: பாவனா பிரச்சினையில் விஷால் கருத்து
Updated on
1 min read

பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிறைய பெண்கள் அதை வெளியே சொல்ல கூச்சப்படுகின்றனர். ஆனால், பாவனா அதை பகிரங்கப்படுத்தியிருக்கிறார். அவரது தைரியத்தைப் பாராட்டுகிறேன். பாவனாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஒரு நடிகைக்கே இந்நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு? கேரள முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே மறுபடியும் இந்த மாதிரியான விஷயத்தில் இறங்க பயப்படுவார்கள், யோசிப்பார்கள். மலையாள திரைப்பட சங்கத்தை தொடர்பு கொண்டு, எங்களால் ஆன உதவியைச் செய்வோம்.பாவனாவை நினைத்து மிகவும் வருந்துருகிறேன். நாங்கள் அனைவரும் அவருக்கு துணை நிற்போம். நிச்சயமாக நீதி கிடைக்கும்.

எண்ணூரில் 5 வயது குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமன்றி பல இடங்களில் குழந்தைகள் மீதான வன்முறை நடந்துவருவதை கேள்விப்படுகிறேன். தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே நிறுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார் விஷால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in