என்னை அரசியலுக்கு வரச் சொல்வதா?- கமல் வேதனை

என்னை அரசியலுக்கு வரச் சொல்வதா?- கமல் வேதனை
Updated on
1 min read

தன்னை அரசியலுக்கு வரச் சொல்வதா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு கமல் ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு நேரில் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அப்போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவுக்கு வந்தவுடன், தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் கமல். அப்பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து "கமல். அரசியலுக்கு வர வேண்டும்" என்று பலரும் சமூக வலைதளத்தில் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் இது குறித்து கமல், "கேள்.. தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய்?. எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"மாணவர்களாகிய உங்களுக்கு துணையாக இருந்ததிற்கு என்னை அரசியலில் சேரச் சொல்கிறீர்களே. இந்த மாதிரி நீங்கள் நினைப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன். மனசு வேதனைப்படுகிறேன்" என்பதை கமல் சுருக்கமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in