டோரா கதை இயக்குநர் தாஸ் ராமசாமியுடையதே: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

டோரா கதை இயக்குநர் தாஸ் ராமசாமியுடையதே: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
Updated on
1 min read

'டோரா' படத்தின் கதை இயக்குநர் தாஸ் ராமசாமியுடையது தான் என்று திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டோரா'. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக். தினேஷ் ஒளிப்பதிவு செய்து வந்த இப்படத்துக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளார்கள். தம்பி ராமையா மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நயன்தாராவுடன் கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். இப்படத்தின் கதை தன்னுடைய 'அலிபாபாவும் அற்புத காரும்' மையப்படுத்தியது என்று ஸ்ரீதர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "ஸ்ரீதர் மற்றும் தாஸ் ராமசாமி இருவரும் சமர்ப்பித்த ஆதாரங்கள் அடிப்பையில் ஆய்வு செய்து இருவருடைய கதைக்களம், கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் வடிவமைப்பு இருவருக்கும் ஒற்றுமை இல்லை என்றும், மாறுபட்டது என்றும் முடிவு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதையே எழுத்தாளர் சங்கத்தின் முடிவாக தீர்மானிக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக தாஸ் ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில், "'டோரா' திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஒருவர் ஒரு கதையை 3 மாதம் முன்பு அதே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து பின் 'டோரா' கதையை தன் கதை என்று பொதுவெளியில் தவறான தகவலை பரப்பிவந்தார். அதையறிந்த நான் எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டிருந்தேன்.

'டோரா' கதை வேறு, அவருடைய கதை வேறு. இரண்டிற்கு எந்த சம்பந்தமுமில்லை என்று எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் மார்ச் 31-ம் தேதி 'டோரா' வெளியீடு என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in