

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான வி.டி.வி கணேஷ் தற்போது ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
ஜெய், வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடிப்பில், சந்துரு இயக்கியுள்ள படம் 'நவீன சரஸ்வதி சபதம்'. இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்காக வி.டி.வி கணேஷ் முதன் முறையாக ஒரு பாடலை பாடியுள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'வானம்' ஆகிய படங்கள் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும், 'இங்க என்ன சொல்லுது' படத்தின் மூலம் நாயகனாகவும் ஆன வி.டி.வி. கணேஷ் இப்படத்தின் மூலம் பாடகராகியுள்ளார்.
' நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய் நாயகனாக நடித்திருந்தாலும், அவரது பெயர் போஸ்டர்களில் இடம்பெறவில்லை.
இது குறித்து விசாரித்தபோது “படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு, பேட்டி என எதுவுமே தரமாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஜெய். இதனால் கோபமான தயாரிப்பாளர் அகோரம், பட விளம்பரங்களில் இருந்து ஜெய் பெயரை நீக்கச் சொல்லிவிட்டாராம். அதுமட்டுமன்றி ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார் “ என்கிறது படக்குழு.