தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.23-ல் வீரசிவாஜி வெளியீடு

தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.23-ல் வீரசிவாஜி வெளியீடு
Updated on
1 min read

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீர சிவாஜி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வீரசிவாஜி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.

புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

தணிக்கை பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in