

இது தொடர்பாக இயக்குநர் ராம்குமார், ‘பார்க்கிங்’ படத்துக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்காக அனைத்து ஊடகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எங்கள் படத்துக்கு கிடைத்த அன்பு மற்றும் பாராட்டுகளால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும், எனது குழுவுக்கும் கிடைத்த ஆசிர்வாதற்கு கடவுளுக்கு மனமார்ந்த நன்றி. எங்கள் படத்தை பெரும் ஆதரவுடன் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது. ‘பார்க்கிங்’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். தற்போது அப்படம் கைவிடப்பட்டு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.