

தனுஷ், கீர்த்தி நடிப்பில் 'மைனா', 'கும்கி' உள்ளிட்ட படங்களை எடுத்தவரான பிரபுசாலமனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், 'தொடரி'. 'தொடரி' தொடர்ந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறதா? இணைய உலகின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
தொடரி இருவரி விமர்சனம்:
'தொடரி' பார்க்க சென்றவர், பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவந்தார்.
இடைவேளை முடிந்து அந்த இருபது நிமிடங்கள் 'அட' போட வைக்கிறார் இயக்குநர்.
வித்தியாசக் கதைக் களத்தைத் தேர்வு செய்து விறுவிறுப்பான ட்ரீட் தந்திருக்கும் இயக்குநர் பிரபு சாலமனுக்கு சபாஷ். தம்பி ராமையா - கருணாகரன் அண்ட் கோ.வின் மொக்கை காமெடி சிரிப்பு மூட்டுவதற்குப் பதில் எரிச்சலூட்டுகிறது! அதற்குப் பதிலாக, பயணிகள் இடையே உரையாடலிலும், உறவாடலிலும் பல்சுவையான காட்சிகளைச் சேர்த்திருந்தால், திரைக்கதையில் தொய்வில்லாமல் இருந்திருக்குமே பாஸ் !
120 கி.மீ. வேகத்தில் விரையும் ரயிலின் மேற்கூரையில் ஹீரோ படு அசால்ட்டாக நிற்பதும், சண்டை போடுவதும் ஓவர்!
தவறவிடக்கூடாத ரயில் பயணம்.
தொடரி = Unstoppable
தொடரி- முதன்முறையாக காமெடியில் பயணம் செய்துள்ளார் தனுஷ். அவை ரசிக்கும்படியே அமைந்திருப்பது சிறப்பு
#தொடரி - காடு, மலை, பசுமை படப்பிரியரான இயக்குனர் பிரபுசாலமன் இந்த முறை ரயில்பெட்டிகளினுள் காதல் கதை சொல்லியுள்ளார். அவ்வளவு வேகமான ரயிலில் மேலே கட்டில் போட்டு மட்டும்தான் நாயகன் தனுஷ் படுக்கவில்லை மற்றபடி ட்ரெய்ன் மேல் ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், சண்டையிடுகிறார்.
Âsalt ÑäñÐhü
தமிழக திரையரங்குகளை நோக்கி வந்த தொடரி வந்த சிறிது நேரத்திலேயே தடம் புரண்டது.
Ramasamy Ramesh
கதாபாத்திரங்களோடு தொடரியில் நம்மோடு இரண்டரை மணிநேரங்கள் தொடரும் அந்த புகைரதமும் தன் பங்கை சிறப்பாக அளித்திருக்கிறது.
தனுஷுக்கான கதையுமில்ல, பிரபு சாலமனுக்கான களமுமில்ல, அதுக்காக மோசமான படமுமில்ல. #தொடரி
#தொடரி ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை. - தனுஷ் பெட்டர் லக் நெஸ்ட் டைம்.
தொடரி படம் முடிஞ்சி வெளில வர்றப்ப, 'போன உசுரு வந்துருச்சி''ன்னு பாடிட்டே வந்துட வேண்டியதுதான்.
வார்த்தைங்கிறது விதை மாதிரி...
நாம எதை விதைக்கிறோமோ
அதைத்தான் அறுவடை செய்வோம்! - தொடரி.
பிரேக் பிடிக்காத ரயில் 750 பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கையில் காதல் பாடல் வந்தால் அதுதான் தமிழ்சினிமா. #தொடரி
ட்விட்டரில் பாட்டு பாடும் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் #தொடரி.
வழக்கமா தனுஷ் படத்துல தனுஷ் பெர்ஃபார்மென்ஸ் தான் பேசப்படும். ஆனா தொடரில கீர்த்தி.
யதார்த்தமான, மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பை ரசிக்க வைத்த தொடரி - அழகான தொடருந்து காதல் காவியம்.
புதுமுகத்தை நாயகனாக வைத்து எடுத்திருந்தால் சிறப்பாக வந்திருக்கும்; தனுஷ், தொடரி என்ற குருவியின் தலைக்குப் பனங்காய்!
ஊரையும் காப்பாத்திட்டு, உசுரையும் கொடுக்குறது
உலகத்துலயே காதலுக்கு மட்டும் தான் இருக்கு. #தொடரி
இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு ஏரியாவில் ‘தொடரி’ வலது காலை எடுத்து வைத்து நுழைந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து பலரும் இந்த மாதிரியான ஃபேன்டஸிகளை காட்சிப்படுத்துவார்கள். அதற்கெல்லாம் முன்னோடியாக இப்படம் இருக்கும். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்.
‘Speed’, ‘Unstoppable’ என்ற இரு ஹாலிவுட் படங்களும் ‘தொடரி’யை பார்க்கும்போது நினைவுக்கு வருகின்றன. இதில், முந்தையது ப்ளாக்பஸ்டர். பிந்தையது டிஸாஸ்டர். இந்த இரு எதிர் எதிர் துருவங்களும் ‘தொடரி’யில் பயணிக்கின்றன என்பது தற்செயலானதல்ல.