Published : 01 Feb 2017 08:27 AM
Last Updated : 01 Feb 2017 08:27 AM

தேவை உருவானால் அரசியலுக்கு வருவேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் திட்டவட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வலி யுறுத்தி சென்னை மெரினா வில் இளைஞர்கள், மாணவர் கள் கடந்த மாதம் தொடர் போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற இளைஞர், மாணவர் அமைப்பினருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப் போது அவர் கூறியதாவது:

இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தியதன்மூலம் பல நல்ல விஷயங்கள் நடந் தன. இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார் கள். இதுதொடர்பாக முதல் வரைச் சந்தித்துப் பேசியுள் ளோம். பரிசீலிப்பதாக கூறி யுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுக்காக இளைஞர்கள் குமரன், பிரகாஷ் எழுதிப் பாடியது, எஸ்.எஸ்.தமன் இசையில் பாடலாக உருவாகி யுள்ளது.

சென்னையில் நடந்த வன் முறைச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்ட குப்பத்துக்காக ரூ.10 லட்சம் கொடுக்கப்போவ தாக அறிவித்திருந்தேன். அரசே அந்தப் பகுதிக்கு நலத்திட்ட உதவிகளை செய்து தருவதாக அறிவித்துள்ளதால், போராட்டத்தில் இறந்த அம்பத்தூர் இளைஞர் மணி கண்டனின் (17) குடும்பத்துக்கு அதை அளிக்க உள்ளேன்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றதுபோல மேலும் பல சாதனைகளை இளைஞர், மாணவர் சக்தி படைக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. இந்த சக்தியானது ஒரு நல்ல அமைப் பாக உருவாக வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் இடம்பெறும் மாணவர்கள், இளைஞர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்களாக இருக்க வேண்டும். தீவிர வாதம், பிரிவினை, மதவாதம் போன்ற கொள்கைகளில் ஈடு பாடு கொண்டவராக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறேன்.

அரசியலுக்காகத்தான் நான் உதவிகள் செய்வதாக சிலர் விமர்சிக்கின்றனர். அது தவறு. பல ஆண்டுகளாக இது போன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. ஒருவேளை, அதற்கான தேவை வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஆக்கப் பணிகளில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் அப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x