மொட்ட சிவா கெட்ட சிவா வெளியீடு: ப்ரூஸ் லீ, எங்கிட்ட மோதாதே வெளியீட்டு தேதி மாற்றம்

மொட்ட சிவா கெட்ட சிவா வெளியீடு: ப்ரூஸ் லீ, எங்கிட்ட மோதாதே வெளியீட்டு தேதி மாற்றம்
Updated on
1 min read

மார்ச் 9-ம் தேதி 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீடு உறுதியானைத் தொடர்ந்து, 'ப்ரூஸ் லீ' மற்றும் 'எங்கிட்ட மோதாதே' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. இப்படத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், மார்ச் 9-ம் தேதி வெளியீடு என்பது உறுதியானது.

இறுதி கட்டத்தில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீடு உறுதிசெய்யப்பட்டதால், மார்ச் 10-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட 'ப்ரூஸ் லீ' மற்றும் 'எங்கிட்ட மோதாதே' ஆகிய படங்கள் வெளியீட்டில் பின்வாங்கியுள்ளது.

இதில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ப்ரூஸ் லீ' மார்ச் 17ம் தேதி வெளியீடாகவும், நட்ராஜ் நடித்துள்ள 'எங்கிட்ட மோதாதே' மார்ச் 24ம் தேதி வெளியிடவும் முடிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே இவ்விரண்டு படங்களும் மார்ச் 10ம் தேதி வெளியீடு என பல லட்ச ரூபாய் விளம்பரத்துக்கு செலவு செய்து வீணாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in