

நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தனது தாயாருக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளார். தனது தந்தையின் சொந்த ஊரானா பூவிருந்தவல்லியில் இந்த கோயில் கட்டப்பட்டவுள்ளது. இதற்கான வேலைகள் துவங்கிவிட்டன. அடுத்த வருடம் இது திறக்கப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், "என் அம்மா கண்மணி உயிருடன் இருக்கும் போதே அவருக்காக ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது எனது கனவு. நான் இந்த உலகத்தில் இருக்கக் காரணம் என் அம்மா. குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்பணிக்கும் ஒவ்வொரு அம்மாவுக்கும் இந்தக் கோயிலை சமர்பிக்கிறேன். எனது தாயின் சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்படுகிறது. அடுத்த வருடம், மிகப்பெரிய விழா ஒன்றை நடத்தி கோயிலை திறக்கவுள்ளேன்" என்று தெரிவித்தார்.
மேலும், தன்னை வளர்க்க தன் தாய் பட்ட கஷ்டங்கள் குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதத் திட்டம் இருப்பதாக லாரன்ஸ் தெரிவித்தார்