

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளா.ர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் ஒற்றுமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் எங்கு நடைபெறவுள்ளது என்ற தகவலை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்வீட்டில் தெரிவிக்கவில்லை.