அரண்மனை முடிந்தவுடன் கலகலப்பு 2

அரண்மனை முடிந்தவுடன் கலகலப்பு 2

Published on

'அரண்மனை' படத்தினை முடித்துவிட்டு, 'கலகலப்பு 2' படத்தினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி

விமல், 'மிர்ச்சி' சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க, சுந்தர்.சி இயக்கிய படம் 'கலகலப்பு'. சுந்தர்.சி இயக்க, குஷ்பு சுந்தர் தயாரித்தார். இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட்டது.

காமெடிக்கு பஞ்சமில்லாமல், சுந்தர்.சி இயக்கிய படம் என்பதால் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் து. அப்படத்தின் வரவேற்பால் 'கலகலப்பு 2' தயாராகும் என்று அறிவித்தார்கள். ஆனால் எப்போது தொடங்கும் என்பதை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது 'அரண்மனை' படத்தினை இயக்கிவரும் சுந்தர்.சி அதனை முடித்துவிட்டு 'கலகலப்பு 2' படத்தினை இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல், மிர்ச்சி சிவா, ஓவியா ஆகியோரது தேதிகளை ஏற்கனவே சுந்தர்.சி பெற்றுவிட்டாராம். தற்போது அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்காத காரணத்தால், இப்படத்தில் வேறொரு நடிகை அவரது வேடத்தில் நடிக்க வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

'ஊதாகலரு ரிப்பன்' ஸ்ரீதிவ்யாவிற்கு அஞ்சலி வேடத்தில் நடித்து ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறதாம். ஏற்கனவே, 'பென்சில்', 'ஈட்டி' என ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் தேதிகள் ஃபுல் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in