ஜூலை 10-ம் தேதி விஜய்மில்டனின் புதிய படம் தொடக்கம்

ஜூலை 10-ம் தேதி விஜய்மில்டனின் புதிய படம் தொடக்கம்
Updated on
1 min read

ஜூலை 10-ம் தேதி முதல் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பரத், ராஜகுமாரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 'கடுகு'. விஜய் மில்டன் தயாரித்த இப்படத்தை சூர்யா வெளியிட்டார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

'கடுகு' படத்தைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள அடுத்த படத்தின் முழுப்பணிகளையும் முடித்துவிட்டார் விஜய் மில்டன். ஜூலை 10-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்.

முழுக்க புதுமுகங்கள் நடிக்கவுள்ள இப்படத்தின் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டு பின்னணி வருகிறது. இதற்காக புதுமுக நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனையும் விஜய் மில்டனே தயாரிக்கவுள்ளார்.

தான் இயக்கவுள்ள படத்தையும் தயாரித்துக் கொண்டே, பாலாஜி சக்திவேல் இயக்கவுள்ள புதிய படத்தையும் தயாரிக்கவிருக்கிறார் விஜய்மில்டன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in