

மார்ச் 10-ல் சிக்கிலின்றி வெளியாகுமா 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்பதில் விநியோகஸ்தர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார்.
இப்படம் வெளியாகவிருந்த தருணத்தில் பணமோசடி விவகாரத்தில் மதன் கைது செய்யப்பட்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியீட்டு உரிமையை மதனிடமிருந்து சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி பிப்ரவரி 17ம் தேதி வெளியீடு என அறிவித்தது.
லாரன்ஸ் தனது முழுசம்பளம் மட்டுமன்றி கொஞ்சம் பணம், பைனான்சியர்கள் கொஞ்சம் பணம் என பலர் விட்டுக்கொடுத்தும் இன்னும் இப்படத்தின் மீதுள்ள பணச்சிக்கல் தீரவில்லை. மேலும், ஒவ்வொரு வாரமும் இப்படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.
பிப்ரவரி 24ம் தேதியில் வெளியிட கடுமையாக முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக மார்ச் 10ம் தேதி வெளியீடு என படக்குழு தீர்மானித்துள்ளது. மார்ச் 7ம் தேதிக்குள் அனைத்து பிரச்சினையும் சரிசெய்யபப்ட்டு, கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்பட்டு 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் தள்ளிவைக்கப்பட்டு வருவதால், பல்வேறு சிறுபட தயாரிப்பாளர்களும் வெளியீட்டு சிக்கலில் சிக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மார்ச் 10-லாவது சிக்கிலின்றி வெளியாகுமா 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்பதில் விநியோகஸ்தர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.