ஐ டீஸர்: திரையுலகினருக்கு ஷங்கர் நன்றி

ஐ டீஸர்: திரையுலகினருக்கு ஷங்கர் நன்றி
Updated on
1 min read

'ஐ' டீஸர் தொடர்பான, திரையுலகினர் கருத்துக்களுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் நடிக்க ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஆஸ்கர் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தாலும், இதுவரை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

'ஐ' டீஸர் வெளியான அன்று, தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இயக்குநர் ஷங்கர் மற்றும் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதற்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

"இயக்குநர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட 'ஐ' டீஸரை குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி" என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

'ஐ' தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீடு விரைவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in