ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை: விஷால் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை: விஷால் விளக்கம்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் தன்னிடம் இல்லை என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து தெரிவித்ததாக தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.இது தொடர்பாக தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் ராஜேஷிடம் கேட்டபோது, “ஜல்லிக்கட்டு தடை தொடர்பான தனது கருத்துக்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவரது உருவபொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் என்னிடம் இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி பேசுவது சரியாக இருக்காது" என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in