சிவகார்த்திகேயன் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு முக்கிய ரோல்

சிவகார்த்திகேயன் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு முக்கிய ரோல்

Published on

மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கும் இப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ஆர்.டி.ராஜா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. முதற்கட்ட பணிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நயன்தாரா, பகத் பாசில், சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் இப்படத்தில் தற்போது பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தைத் தொடர்ந்து பொன்ராம் - சிவகார்த்திகேயன் படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ஆர்.டி.ராஜா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in