

'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தின் பாடல் பணிக்காக இயக்குநர் பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் லண்டன் சென்றுள்ளார்கள்.
'குலேபகவாலி', 'எங் மங் சங்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டே 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடித்துவிட்டார் பிரபுதேவா.
விஷால், கார்த்தி, சாயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தை ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் பாடல் பணிகளுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் லண்டனுக்கு சென்றுள்ளார்கள். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து, 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' பாடல்கள் பணிகளை முடித்துவிட்டு ஜூன் 21-ம் தேதி கிளம்பி சென்னை திரும்பவுள்ளார்கள்.
2011-ம் ஆண்டு பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்துக்குப் பிறகு, பிரபுதேவா - ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.