ரஜினிகாந்த் தான் முன்னுதாரணம் : அனிருத்

ரஜினிகாந்த் தான் முன்னுதாரணம் : அனிருத்
Updated on
1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனக்கு முன்னுதாரணம் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்

'வணக்கம் சென்னை' படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் அனிருத் அக்டோபர் 16ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தனது ட்விட்டர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதில்கள் சில “ எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் மிகப்பெரிய முன்னுதாரணம். நான் இதுவரை இசையமைத்துள்ள பாடல்களில் 'வணக்கம் சென்னை' படத்தில் இடம்பெற்ற 'ஒ பெண்ணே.. ஒ பெண்ணே...' பாடல் தான் எனது மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.

நிறைய கதைகள் கேட்கிறேன். எந்த கதை என்னை அதிகமாக கவர்கிறதோ, அதில் தான் நிறைவாக இசையமைக்க முடியும் என்பதால் படங்களைக் குறைவாகவே ஒத்துக் கொள்கிறேன்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் (நான் இசையமைக்கும்)படத்தினை விரைவில் பெரியளவில் அறிவிக்க இருக்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' படம் மிகவும் பிரம்மாண்டமானது, அப்படத்திற்கு ஹங்கேரி கலைஞர்களை வைத்து பின்னணி இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.

எனக்கு 13 வயது முதல் தான் இசை மீதான ஆர்வம் அதிகமானது. 'ஆரம்பம்' படத்தின் டிரெய்லர் மிகவும் பிடித்திருந்தது. அப்படத்தினை முதல் நாள் முதல் காட்சி காண ஆர்வமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in