

நடிகர் கவுண்டமணியின் உடல் நிலை குறித்து தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருவதற்கு எதிராக போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர் கவுண்டமனி உடல் நலமாக இருப்பதாகவும், கதை விவாதத்தில் தினமும் ஈடுபாட்டோடு செயலாற்றி வருவதாகவும் தன்னைப் பற்றி தவறான தகவல் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுண்டமணி தன் வழக்கறிஞர் மூலம் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் என்றும் கவுண்டமணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கவுண்டமணி உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்