மீண்டும் படம் இயக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணா

மீண்டும் படம் இயக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணா
Updated on
1 min read

'ஆரோகணம்' படத்தினைத் தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணா தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார்.

பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணா, 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2012ல் வெளியான அப்படம் பல்வேறு விழாக்களிலும், விமர்சகர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.

அவர் தற்போது அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் பணிகளைத் துவக்கியுள்ளார். நாயகன் தேர்வு நடைபெற்று வருகிறது. பியா, 'லுசியா' ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரா, ஏ.எல்.அழகப்பன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' பாலாஜி ரங்கா, இசை மேட்லி புளூஸ், படத்தொகுப்பு சாபு, பாடல்கள் தாமரை என கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்கி கும்பகோணம், கோயம்புத்தூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in