நடிகை சமீரா ரெட்டி அவசர திருமணம்

நடிகை சமீரா ரெட்டி அவசர திருமணம்
Updated on
1 min read

ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தனது காதலர் அக்‌ஷ்ய் வர்தேவை திடீரென அவசரமாக திருமணம் செய்து கொண்டார் சமீரா ரெட்டி.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் முன்னணி நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. தமிழில் 'வாரணம் ஆயிரம்', 'அசல்', 'வேட்டை', 'வெடி' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

சமீரா ரெட்டிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். ஏப்ரல் 2014ல் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி- தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே திருமணம் மும்பையில் உள்ள சமீரா ரெட்டி பங்களாவில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

கணவர் அக்‌ஷ்ய் வர்தே தொழிலை விரிவுபடுத்தும் பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல இருப்பதால் அவசர திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in