

'வீரம்' படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா உரிமைகளை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
அஜித், தமன்னா நடித்து வரும் 'வீரம்' படத்தினை 'சிறுத்தை' சிவா இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தினை, விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் விநியோக உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. தமிழ்நாட்டின் பெரிய விநியோக ஏரியாவாக கருதப்படும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா உரிமைகளை ராமநாராயணின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இந்நிறுவனம் தான் 'ஆரம்பம்' செங்கல்பட்டு ஏரியா உரிமையை வாங்கி, அதிக திரையரங்குகளில் அப்படம் வெளியாக காரணமாக இருந்தார்கள். ’ஆரம்பம்’ படத்தை 3 நாட்களுக்கு மட்டும் என திரையரங்கு ஒப்பந்தம் செய்து அதிக திரையரங்குகளில் வெளியாகி, வசூலையும் அள்ளியது.
தற்போது, அதே நிறுவனம் 'வீரம்' படத்தின் உரிமையையும் வாங்கி வெளியிட இருப்பதால், அதிக திரையரங்குகளில் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.