

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள 'சய்ராட்' ரீமேக்கில், முழுக்க புதுமுகங்களை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான மராத்தி திரைப்படம் 'சய்ராட்'. ரிங்கு ராஜ்குரு மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் 5 கோடியில் தயாரிக்கப்பட்டு 150 கோடி வசூலை ஈட்டியது. மேலும், அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டு, தேசிய விருதும் வென்றது.
இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் இப்படம் வெளியாகி, விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இதில், அனைவருக்கும் தெரிந்த நடிகர்கள் நடித்தால் இப்படத்தின் கதைக்கு சரியாக இருக்காது என முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், தென்னிந்திய ரீமேக்கை இயக்க நாகாரஜ் மஞ்சுளேவிடமுமே பேச்சுவார்த்தை நடத்தவுடன் படக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் 'நாச்சியார்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.