எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: விஜய் சேதுபதி

எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: விஜய் சேதுபதி
Updated on
1 min read

எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். '96' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வருகிறார்கள். நந்தகோபால் தயாரித்து வருகிறார்.

'96' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, "12-ஆம் வகுப்பில் ஆரம்பிக்கும் ஒரு காதல் கதை. 1996-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பற்றிய கதை. அதை குறிப்பதே படத்தின் 96 என்ற தலைப்பு.

த்ரிஷா என்னுடன் இணைந்து பணியாற்றுவாரா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்" என்றார்.

39 வயதில் பள்ளி சிறுவனாக நடிப்பது சவாலாக இருக்காதா? என்ற கேள்விக்கு "பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் நான் சிறிது நேரம் தான் தோன்றுவேன். அதிலிருக்கும் சவால்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு நடிகனாக எனது வேலை கதைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதே. நான் எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in