ஸ்ருதிஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

ஸ்ருதிஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!
Updated on
1 min read

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் ‘ரேஸ் குர்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட் களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓய்வே இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டது, அடுத்தடுத்து வரும் படத்தின் ரிலீஸ் ப்ரமோஷன் அலைச்சல்கள்தான் உடல்நல பாதிப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in