

கடந்த சனிக்கிழமை (ஜன.4) அன்று விஜய், தனுஷ் இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.
விஜய் ரசிகர்கள் அனைவருமே 'ஜில்லா' டிரெய்லர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆர்வத்தோடு காத்திருந்த நேரத்தில், விஜய் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் உறைய வைத்தார் தனுஷ்.
அதிகாரப்பூர்வ 'ஜில்லா' ட்விட்டர் தளம், நடிகர் ’ஜித்தன்’ ரமேஷ், ஜீவா ஆகியோரது ட்விட்டர் தளம் ஆகியவற்றில் ’ஜில்லா’ குறித்து ஏதாவது தகவல் வெளியிடுகிறார்களா என்று விஜய் ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்தார்கள்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று தனுஷ் "இளைய தளபதி விஜய்யை சந்தித்தேன். அவரோடு ஆடினேன், பாடினேன். நிறைய பேசினேன். லவ் யூ பிரதர்.." என்று ட்வீட்டினார். இதோடு விஜய்யோடு தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.
உடனே விஜய் ரசிகர்கள் 'எங்களுக்கு ஒரு ஹாய் சொல்லச் சொல்லுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தனர். உடனே விஜய் ஹாய் சொல்லுவது போல் புகைப்படம் எடுத்து, "நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க.. விஜய் இப்போது உங்களுக்கு எல்லாம் ஹாய் சொல்லுகிறார்." என்று புகைப்படத்தோடு ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் தனுஷ்.
சிம்புவிற்கு தல என்றால், தனுஷிற்கு தளபதி போல... ம்ம்ம்ம்ம்ம்ம்...