

திட்டமிட்டபடி 'வீரம்' படத்தினை முடித்து கொடுத்த இயக்குநர் சிவாவை , படத்தின் தயாரிப்பாளர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
அஜித், தமன்னா, சந்தானம், பாலா, வித்தார்த், ரமேஷ் கண்ணா, அப்புக்குட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் 'வீரம்'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, விஜயா வாஹினி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பொங்கல் வெளியீடு என்று திட்டமிடப்பட்டு இருக்கும் 'வீரம்' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சி இருந்தாலும், ஒரே குடும்பம் போல் பழகி வந்தவர்கள் இனி அடிக்கடி சந்திக்க முடியாது என்பதால், படக்குழுவினரை துக்கத்தில் ஆழ்த்தியது.
குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குநர் சிவாவையும் , தொழில்நுட்ப கலைஞர்களையும் தயாரிப்பாளர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
”அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்” என்று தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி மற்றும் வெங்கட்ராம ரெட்டி கூறியுள்ளனர்.