

முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அரவிந்த்சாமி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, "எம்.எல்.ஏக்களை மீண்டும் நம் சமூகத்துக்கு வந்து வேலை செய்யச் சொல்லுங்கள். கொண்டாட இரு தரப்புக்கும் எதுவுமில்லை.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், அது சொல்லும் விஷயமும் என்ன என்று நினைவில் கொள்ளுங்கள். நமது காபந்து முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். முதலில் மக்கள், பிறகுதான் அரசியல்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.