2 நாட்களில் வீடு திரும்பும் இளையராஜா

2 நாட்களில் வீடு திரும்பும் இளையராஜா
Updated on
1 min read

இளையராஜா தற்போது ஐ.சி.யூவில் இருந்து ஸ்பெஷல் வார்டு மாற்றப்பட்டு, இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்.

இசைக் கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளையராஜாவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் இளையரஜா பங்கேற்பதாக இருந்தது. அனைவருமே இளையராஜா இசைநிகழ்ச்சி என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நடைபெறுவது கார்த்திக் ராஜாவின் முதல் இசை நிகழ்ச்சி என்று கூறுகிறார்கள். அந்நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இளையராஜா பங்கேற்வில்லையாம்.

அதற்கு மாற்றாக, வீடியோ கான்பிரன்சிங் மூலமாக மக்கள் முன் தோன்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சியில் வீடியோ மூலம் உரையாற்றிவிட்டு, பூரண நலம் பெற்றபின் மலேசியா செல்ல திட்டமிட்டு இருக்கிறார் இளையராஜா.

'KING OF KINGS' தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட தொலைபேசி வாயிலாக, "நல்லாத்தான் இருக்கேன். என் ஹெல்த்தை பற்றி யாரும் கவலைப்படவேண்டாம். என் ஹெல்த் என்னை நல்லா பார்த்துக்கும். நான் வந்து உங்களை சந்திக்கிறேன்.. வந்துர்றேன்.. வந்துர்றேன்..” என்று கூறினார்.

தற்போது ஐ.சி.யூவில் இருந்து ஸ்பெஷல் வார்டுற்கு இளையராஜா மாற்றப்பட்டு இருக்கிறார். ஸ்பெஷல் வார்டில் இருந்து 2 நாட்களில் வீடு திரும்பக்கூடும் என்று கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

திரையுலக சேர்ந்த முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் பலரும் இளையராஜா பூரண நலம் பெற வேண்டும் என்று தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in