

'நய்யாண்டி' படத்தினைப் பார்த்த நஸ்ரியா தரப்பினர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற திட்டமிட்டுருக்கிறார்கள்.
'நய்யாண்டி' படத்தில் இடுப்பை அணைக்கும் காட்சிக்கு தனது அனுமதியின்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி, அதனை எனது முகத்துடன் இணைத்து போஸ்டர்களின் பயன்படுத்தி விட்டார்கள் என்று தனது பேஸ்ஃபுக்கில் தெரிவித்திருந்தார் நஸ்ரியா.
அக்காட்சியில் இருப்பது டூப் இல்லை, நஸ்ரியா தான் என்று பதிலடிக் கொடுத்தார் இயக்குனர் சற்குணம்.
அதனைத் தொடர்ந்து நஸ்ரியா, 'நய்யாண்டி' படத்தினை தனக்கு போட்டுக் காட்டிவிட்டு திரையிட வேண்டும் என்றும், அவ்வாறு மறுத்தால், படத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று நஸ்ரியாவின் தந்தை நசீம், வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் பார்த்திருக்கிறார்கள்.
படத்திலிருக்கும் 'அக்காட்சி' ஆபாசமாக இல்லை என்பது தெளிவானதால், சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். உறுத்தலான அக்காட்சியையும் படத்தில் இருந்து நீக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து இன்று இரவு 7:30 மணிக்கு நஸ்ரியா பத்திரிக்கையாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். இத்துடன், இந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது.