விரைவில் படப்பிடிப்பு நடக்கும் வாய்ப்புகள் குறைவு: சபாஷ் நாயுடு படக்குழு

விரைவில் படப்பிடிப்பு நடக்கும் வாய்ப்புகள் குறைவு: சபாஷ் நாயுடு படக்குழு
Updated on
1 min read

விரைவில் படப்பிடிப்பு நடக்கும் வாய்ப்புகள் குறைவு தான் என்று 'சபாஷ் நாயுடு' படக்குழுவில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் கமல்ஹாசன். அலுவலகத்தில் மாடிப்படியில் இறங்கும் போது கீழே விழுந்ததால், பலத்த அடிபட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருடைய இல்லத்தில் தொடர் ஒய்வில் இருந்து வருகிறார் கமல். இதனால் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு மற்றும் வெளியீடு உள்ளிட்ட விஷயங்களில் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால், நீண்ட நாட்களாக எதுவுமே தொடங்கப்படவில்லை.

படப்பிடிப்பு தாமதம் குறித்து படக்குழுவில் பணியாற்றும் ஒருவரிடம் பேசிய போது, "படக்குழு அடுத்த வாரம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டாலும், அமெரிக்கா செல்லும் குழுவுக்கு விசா வாங்க குறைந்தது 6-8 வாரங்கள் ஆகும்.

மேலும், மற்ற நடிகர்களின் தேதிகள் ஒத்துவர வேண்டும். சில நடிகர்கள் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், இப்போதைக்கு காலவரையின்றி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு நடக்கும் வாய்ப்புகள் குறைவு தான். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாதில் நடத்த திட்டமிட்டுள்ளனர்" என்று தெரிவித்தது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in