

தமிழ் திரையுலகில் முக்கிய தயாரிப்பாளரான சி.வி.குமார் விரைவில் படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி' என வரிசையாக சி.வி.குமார் தயாரித்த படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது 'முண்டாசுப்படி', 'லுசியா’ படத்தின் ரீமேக் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் கதாநாயகர்கள் கால்ஷீட்டிற்கு ஏற்றவாறு கதை தேடினார்கள். ஆனால் சி.வி.குமார் தன்னிடம் வந்த கதைக்கு ஏற்ற நாயகனை தேடினார். நல்ல கதைக்கே முன்னுரிமை என்பது இவரது ஹிட் பார்முலா.
வெற்றி தயாரிப்பாளராக வலம் வந்தவர், படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இவர் இயக்கவிருக்கும் படத்தினை அபி & அபி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.