

சென்னையில் சொகுசு கார் மோதி பலியான ஆட்டோ ஒட்டுநர் மகளின் கல்வி செலவை ஏற்றுள்ளார் நடிகர் விஷால்.
சென்னையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மகனின் சொகுசு கார் மோதியதில் திருத்தணி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். ஏற்கெனவே தாயையும் பறிகொடுத்திருந்த நிலையில் மயிஷா என்ற 7 வயது சிறுமி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இச்செய்தியை அறிந்த நடிகர் விஷால், அக்குடும்பத்தைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பெற்றோரை இழந்து வாடும் அச்சிறுமியின் கல்விச் செல்வரை தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்ளும் என்று தெரிவித்து அக்குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.